×

வெளிநாடு தப்புவதை தடுக்க ரெட் கார்னர்‘ நோட்டீஸ் வந்தால் ‘பாஸ்போர்ட்’ ரத்து: அமித்ஷா அறிவிப்பு

புதுடெல்லி: வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த, ரெட் கார்னர் நோட்டீஸ் பெற்றவர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வது உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,’ ஒவ்வொரு மாநிலமும் சர்வதேச தரத்தில் குறைந்தது ஒரு சிறை அறையையாவது உருவாக்க வேண்டும். ஒரு குற்றம்சாட்டப்பட்டவர் மீது இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டவுடன், அவரது பாஸ்போர்ட்டை உடனடியாக முடக்கி, ரத்து செய்ய வேண்டும். தற்போதைய தொழில்நுட்பத்தில் இது கடினமான காரியம் அல்ல. இது, குற்றவாளிகளின் சர்வதேச பயணத்தைத் தடுக்க உதவும்’ என்றார்.

Tags : Amit Shah ,New Delhi ,Union Home Minister ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...