×

கறம்பக்குடி அக்னி ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

கறம்பக்குடி, அக்.17: கறம்பக்குடி அக்னி ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் தப்பியேடிய நபருக்கு நபரை வலை தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் கரு கீழத்தெரு வட்டம் குரும்பிவயல் கிராமத்தில் அக்னி ஆற்றில் மணல் அள்ளுவதாககாவல் காவல்துறைக்கும் தாசில்தாருக்கும் வந்த தகவலை எடுத்து தாசில்தார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.

அப்போது குரும்பிவயல் கிராமத்தில் தாசில்தார் சோதனையை ஈடுபட்டபோது மாட்டு வண்டியில் மணல் அள்ளிய போது வருவாய் துறையை பார்த்தவுடன் மாட்டு வண்டியை அப்படியே விட்டுவிட்டு மணல் அல்லி அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.  உடனடியாக தாசில்தார் மாட்டுவண்டியை பறிமுதல் செய்து வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து வடகாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags : Agni River ,Karambakkudi ,Kurumbiwayal ,Karumbiwayal taluk ,
× RELATED கல்லக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்