×

நயினார் நாகேந்திரன், அமைச்சர் முத்துசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து,‘பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கட்சி பாகுபாடு இன்றி அனைவரிடத்திலும் அன்போடு, அமைதியோடு பேசக் கூடியவர். சிறந்த அரசியல்வாதியாக விளங்கிக் கொண்டிருக்கும் நயினார் 64 வயது முடிந்து 65வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். என்னுடைய சார்பிலும், திமுக எம் எல் ஏ.க்கள் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துகள். அமைச்சர் முத்துசாமிக்கும் இன்று பிறந்தநாள். அவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள்’’ என கூறினார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Nainar Nagendran ,Minister ,Muthusamy ,Chennai ,Assembly ,BJP ,president ,
× RELATED இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தரவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்