×

28 மாவட்டங்களில் ஊராட்சி தனி அலுவலர்கள் பதவிக் காலம் நீட்டிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவை அமைச்சர் இ.பெரியசாமி நேற்று அறிமுகம் செய்தார். அதில் கூறி இருப்பதாவது: ‘காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளை தவிர்த்து 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 5ம் தேதியோடு முடிவடைந்தது. எனவே, தேர்தல் நடைபெறும் வரை இந்த ஊராட்சிகளின் அன்றாட விவகாரங்களை நிர்வகிப்பதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பதவிக்காலம் ஜூலை 5ம் தேதியுடன் முடிவடைந்ததால், 28 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2026 ஜனவரி 5ம் தேதி வரை நீட்டிப்பு செய்தவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்ட திருத்தம் செய்யக்கூடிய வகையில் அதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

Tags : Panchayat ,Chennai ,Minister ,E. Periyasamy ,Legislative Assembly ,Kanchipuram ,Chengalpattu ,Villupuram ,Kallakurichi ,Vellore ,Ranipet ,Tirupattur ,Tirunelveli ,Tenkasi ,districts… ,
× RELATED இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தரவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்