×

நீரிழிவு நோய் மருத்துவர் பாலமுருகனுக்கு கோல்டன் டாக்டர் விருது

கோவை, அக்.16 : கோவை ராம்நகரில் செயல்பட்டு வரும் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பாலமுருகனுக்கு கோல்டன் டாக்டர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜிஆர்டி ஜிவல்லர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கோவை ராடிசன் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற விழாவில், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளை தலைவர் டாக்டர் செங்கூட்டுவன், செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு மற்றும் இந்திய மருத்துவ கழகத்தின் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் அபுல் ஹாசன் ஆகியோர் வழங்கினர்.மருத்துவர் பாலமுருகன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை தோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். அவர் கோவை இந்திய மருத்துவச் சங்கத்தின் இணைச் செயலாளராக இருந்து வருகிறார். மேலும், இந்திய மருத்துவ சங்க மாநில சர்க்கரை நோய் விழிப்புணர்வு கமிட்டி தலைவராகவும் சேவை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Balamurugan ,Coimbatore ,Coimbatore Diabetes Specialist Centre ,Hospital ,Ramnagar, Coimbatore ,GRT Jewellers ,Coimbatore… ,
× RELATED எஸ்ஐஆர் பணிகள்; பூர்வீக விவரங்கள் மீண்டும் ஆய்வு