×

ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.58.31 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற கொப்பரை ஏலத்தின்போது 117 விவசாயிகள், 728 மூட்டை கொப்பரைகளை கொண்டு வந்திருந்தனர். அவை தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது.

இதில் முதல்தரம் 422 மூட்டை கொப்பரை ரூ.216.60முதல் ரூ.212.50வரையிலும், 423 மூட்டை இரண்டாம் தர கொப்பரை ரூ.170 முதல் ரூ.196 வரை என 327 குவிண்டால் கொப்பரை மொத்தம் ரூ.58.31 லட்சத்துக்கு ஏலம் போனது. இதனை 8 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் என ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Copra ,Anaimalai ,Pollachi ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...