×

கூட்டு பாலியல் பலாத்காரம் மருத்துவ மாணவியின் காதலன் கைது

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் மாணவி பலாத்கார வழக்கில் அவரது காதலன் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க மாநிலம் பஸ்சிம் பர்தாமன் மாவட்டம் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண், கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாமாண்டு பயின்று வருகிறார்.

இவர் கடந்த 10ம் தேதி இரவு தன் ஆண் நண்பர் ஒருவருடன் அந்த மாணவி தன் ஆண் நண்பர் ஒருவருடன் வௌியே சென்று உணவருந்தி விட்டு விடுதிக்கு திரும்பினார். அப்போது ஆண் நண்பரை விரட்டி விட்டு மாணவியை காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்ற கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரை துர்காபூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியை தனியே விட்டு சென்ற அவரது காதலனிடம் ேநற்று காவல்துறையினர் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை கைது செய்தனர். சிறுமி பலாத்காரம்: கொல்கத்தாவில் சிறுமியை ஒரு நபர் பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags : Kolkata ,West Bengal ,Odisha ,Durgapur, Paschim Bardhaman district, West Bengal ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்