×

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு கட்டிடங்கள் சேதம்

 

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ஜம்மு நகர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சோம்ரோலி பகுதியில் நர்சூ சந்தை இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை 11.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த புதிதாக திறக்கப்பட்ட ஒரு ஹோட்டல் கட்டிடம் மற்றும் இரண்டு கடைகள் பெரிதும் சேதமடைந்தன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “நிலச்சரிவுக்கு முன்பாக சந்தை பகுதியில் இருந்த அனைவரும் வௌியேற்றப்பட்டதால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டனர்” என்றனர்.

 

Tags : Jammu and Kashmir ,Jammu ,Jammu and ,Kashmir ,Narsu Market ,Somroli ,Jammu-Nagar National Highway ,Udhampur district ,
× RELATED யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை...