×

பைக் மீது லாரி மோதி கம்பெனி மேலாளர் உயிரிழப்பு

 

அண்ணாநகர்: கோயம்பேடு சேமாத்தம்மன் கோயில் 2வது தெருவை சேர்ந்தவர் பாலாஜி (30), தனியார் கம்பெனி மேலாளர். இவர், நேற்று அதிகாலை 3 மணி அளவில், பூந்தமல்லி நெடுஞ்சாலை கோயம்பேடு மெட்டுகுப்பம் சந்திப்பில் பைக்கில் சென்ற போது, பின்னால் வந்த சிமென்ட் கலவை லாரி, இவரது பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த பாலாஜி மீது லாரி சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதை பார்த்த டிரைவர், லாரியுடன் தப்பினார். தகவலறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து, தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

 

Tags : Annanagar ,Balaji ,2nd Street, Semathamman Temple, Koyambedu ,Koyambedu Mettukuppam ,Poonamallee Highway ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்