×

திருச்செந்தூரில் ஓவியபோட்டி

தூத்துக்குடி, அக். 12: உலக அமைதிக்காக திருச்செந்தூர் ஸ்டார் மாடர்ன் மெட்ரிக் பள்ளியில் அரிமா சங்கங்களின் சார்பில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு அரிமா சங்க முன்னாள் ஆளுநர் முருகன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். அரிமா சங்க உலக அமைதிக்கான தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் ஒருங்கிணைப்பில் திருச்செந்தூர் சிட்டி அரிமா சங்கம், சாயர்புரம் செவத்தையாபுரம் அரிமா சங்கம், சாத்தான்குளம் ஸ்டார் லைன்ஸ் சங்கம் ஆகியவற்றின் சார்பில் திருச்செந்தூர் ஸ்டார் மாடர்ன் மெட்ரிக் பள்ளியில் உலக அமைதிக்கான ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. அரிமா சங்க ஆளுநர் ஷாஜகான், முன்னாள் ஆளுநர் பிரான்சிஸ் ரவி ஆகியோர் போட்டியைத் துவக்கிவைத்தனர். இப்போட்டியில் திருச்செந்தூர் வட்டாரத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து ஆர்வத்துடன் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அரிமா சங்க முன்னாள் ஆளுநர் ஜேகேஆர் ஜெ முருகன், வெற்றிபெற்ற அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கிப் பாராட்டினார். பல்வேறு அரிமா சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். நிகழ்வில் மண்டல தலைவர் கிங்ஸ் டிவி அன்பரசன், வட்டாரத் தலைவர் சகாயராஜ், வட்டாரத் தலைவர் அமிர்தராஜ், தலைவர் ஆனந்த், தலைவர் பண்டாரம், தலைவர் சுந்தர், அமல்ராஜ், நவராஜ், எட்வின், அருண்குமார், விஜய் சிவா, பாஸ்கர், இன்ஜினியர் வனமூர்த்தி, டாக்டர் பன்னீர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Trincomalee ,Thoothukudi ,Former ,Governor Murugan ,Arima Association ,Arima Associations ,Star Modern Metric School ,Trinchendur ,TOTHUKUDI ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா