தரமான காய்கறிகளை பயன்படுத்துகிறார்களா? வேலூர் அம்மா உணவகங்களில் கமிஷனர் ஆய்வு

வேலூர், டிச.27: தரமான காய்கறிகள் பயன்படுத்துகிறார்களா? என்று அம்மா உணவகஙகளில் கமிஷனர் சங்கரன் நேற்று ஆய்வு செய்தார்.

வேலூர் மாநகராட்சியில் சுமார் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. இந்த உணவகங்களில் காலை, மதியம் நேரங்களில் உணவுகள் சமைத்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் அம்மா உணவகங்களில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறி வகைகள், உணவுப்பொருட்கள் தரமானதாக பயன்படுத்துகிறார்களா?

என்று கமிஷனர் சங்கரன், உதவி கமிஷனர் மதிவாணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தார். இதில் அலமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் காய்கறிகள் தரமாக உள்ளதா? என்று ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள பெண்களிடம் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். உணவுகளை சுத்தமாக செய்து பரிமார வேண்டும் என்று அறிவுறுத்தினார். வேலூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள உணவகத்தில் கமிஷனர் சங்கரன் ஆய்வு செய்தார். உடன் உதவி கமிஷனர் மதிவாணன்.

Related Stories:

>