×

வேலூரில் இன்று 17 மையங்களில் நடக்கிறது

வேலூர், டிச.27: வேலூரில் இன்று 17 மையங்களில் நடக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வை 1,589 பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 2020-21ம் கல்வி ஆண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வு காலை 9 மணி முதல் 11 மணி வரையில், மனத்திறன் தேர்வு காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை படிப்பறிவு தேர்வு என 2 வகைகளில் தேர்வு நடக்கிறது.

இதற்காக, வேலூர் மாவட்டத்தில் வேலப்பாடி, கொசப்பேட்டை, காட்பாடி ஆகிய இடங்களில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி, கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, பொய்கை, அணைக்கட்டு, கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 17 மையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 1,589 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அறைக்கு 10 வீதம் ஒரு தேர்வு மையத்தில் அதிகபட்சமாக 130 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் மையத்திற்குள் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : centers ,Vellore ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!