×

மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள மாநகராட்சிகளில் ஆள்சேர்ப்பு மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு மாநில தீயணைப்பு மற்றும் சேவைகள் துறை அமைச்சர் சுஜித் போஸ் வீட்டில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சுஜித் போஸிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், சுஜித் போஸின் வீடு உள்பட 6 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது குறித்து அமலாக்க அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ சால்ட் லேக்கில் உள்ள அமைச்சர் போஸின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரிப்பதற்கு இந்த சோதனைகள் நடத்தப்பட்டது’’ என்றார்.

Tags : Enforcement Directorate ,West ,Bengal ,minister ,Kolkata ,West Bengal ,State Fire ,Services ,Sujit Bose ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்