×

மதுரையில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு: சிபிசிஐடிக்கு மாற்றம்

மதுரை: மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அண்ணாநகரில் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது கால்வாயில் விழுந்து தினேஷ் உயிரிழந்தன. வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி உடற்கூறாய்வு செய்து இளைஞர் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. வழக்கு விசாரணை முதற்கட்டத்தில் உள்ளதால் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என போலீசார் பதில் அளித்தார்.

Tags : Madurai ,CBI ,Dinesh ,Annanagar ,High Court ,CBI… ,
× RELATED சிறுபான்மையினர் ஆணையத்தின் 38 மாவட்ட...