நெல்லை, டிச. 27: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி ‘அதிமுகவை புறக்கணிப்போம்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் திமுக நிர்வாகிகள், சார்பு அணியினர், ஊர் மக்கள் என திரளானோர் பங்கேற்றனர். தென்காசி : தென்காசியில் நகர திமுக சார்பில் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. தென்காசி நகராட்சி 11வது வார்டு செண்பக விநாயகர் கோயில் தெரு, கூலக்கடை பஜார் பகுதிகளில் நடந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் சாதிர் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஆயான் நடராஜன், வக்கீல் ராஜா, நகர நிர்வாகிகள் நடராஜன், பால்ராஜ், ஷேக்பரீத், அப்துல்கனி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார்.
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமித்துரை, நகர நிர்வாகிகள் சித்தார்த்தன், கஜேந்திரன், ராமராஜ், மாடசாமி, ஷேக் மைதீன், அழகிரி, மணிராஜ், அவுலியா, ராமையா, சண்முகநாதன், ரவி, நாகூர் மீரான், முகமது ரபி, அஸ்ரப் அலி, செய்யது ஆபில், முருகன், கட்டியப்பா, முத்து, பரமசிவன், மோகன்ராஜ், சாகுல் ஹமீது, அப்துல் காதர், அலி, பிரகாஷ், அருண்குமார், குமார், ராமநாதன், மகாலிங்கம், சுப்பிரமணியன், கோபால்ராம், ராமகிருஷ்ணன், நாகப்பன், பட்டாணி உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி அடுத்துள்ள மேலகரம் பேரூராட்சி 3வது வார்டில், பேரூர் திமுக சார்பில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. பேரூர் செயலாளர் சுடலை தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கிட்டுபாண்டியன், குற்றாலம் குட்டி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் வக்கீல் வேலுச்சாமி முன்னிலை வகித்தனர். தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி ரமேஷ்குமார், பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய பிரதிநிதிகள் யாகவா சுந்தர், கணேசன், இளைஞரணி அமைப்பாளர் கபிலன், நன்னை சுந்தர், பேச்சாளர் முத்துவேல், வார்டு நிர்வாகிகள் குமாரவேல், கபீர்ஷெரிப், பாலசுப்பிரமணியன், ஈஸ்வரன், காசிவிசுவநாதன், சந்திரன், பட்டன், மனக்காவலன், குருசாமி, பட்டதேவர் மனோகர், பன்னீர், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மத்தளம்பாறை ஊராட்சியில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்திலும் கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம் பங்கேற்று பேசினார். கிளை செயலாளர் ஆத்தியப்பன் வரவேற்றார். காசிகிருஷ்ணன், கனகராஜ் முத்துப்பாண்டி, ரவி(எ)லெட்சுமணன், சண்முகநாதன், கிளை செயலாளர் சிவனுபாண்டியன், வேல்ராஜ், ராஜா, ராமர், பிச்சமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். கருப்பசாமி நன்றி கூறினார்.
திசையன்விளை: ராதாபுரம் ஒன்றிய திமுக சார்பில் உறுமன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பெட்டைகுளம் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் விஎஸ்ஆர் ஜெகதீஸ் தலைமை வகித்தார். ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை பேரூர் செயலாளர் ஜோன் கென்னடி முன்னிலை வகித்தனர். இதில் திரளாகப் பங்கேற்ற மக்கள், ஊரில் நிலவும் குறைகளை எடுத்துரைத்தனர். இவை அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் தீர்த்துவைக்கப்படும் என ஒன்றியச் செயலாளர் விஎஸ்ஆர் ஜெகதீஸ் உறுதியளித்தார்.
கூட்டத்தில் தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தனபால், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜான்ரபிந்தர், மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜான்சன், சூசை அந்தோனி, ஜோசப், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் முரளி, ஒன்றிய துணைச் செயலாளர் நாராயணன், முன்னாள் மாவட்டப் பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், உறுமன்குளம் ஊராட்சி செயலாளர் அமைச்சியார், முன்னாள் பஞ். தலைவர் அப்துல்காதர், மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சரோஜா, கலை இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுப்பையா, மாவட்டப் பிரதிநிதி வேலப்பன், இளைஞர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர் சுபாஷ்சாம், சிறுபான்மை பிரிவு ஞானராஜ், மகளிர அணி பாத்திமா, நஜிமா, ஊராட்சி செயலாளர்கள் ராஜன், மணி, ராஜா, தில்லை, ஜேக்கப், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பஷீர், திசையன்விளை நடராஜன், நசுருதீன், திசையன்விளை பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில், வடிவம்மன்பட்டி முத்து, கரைச்சுத்துபுதூர் சாகுல்ஹமீது, கரைச்சுத்துஉவரி திராவிடமணி, அப்பாதுரை, பன்னீர்செல்வம், நம்பிகுறிச்சி, கென்னடி, கிளைச் செயலாளர்கள் இசக்கிமுத்து, சேவியர், ஆதாம், வீரமணி, வில்சன், மாகலிங்கம், ஜவஹர், தணக்கர்குளம் சங்கர், தோப்புவிளை ஜோசப், டென்னிஸ் என திரளானோர் பங்கேற்றனர்.
70 பேர் மீது வழக்கு
திசையன்விளை : பெட்டைக்குளத்தில் திமுக சார்பில் கொரோனா விதிமுறைகளை மீறி அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக ராதாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ். ஆர். ஜெகதீஸ், மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜோசப் பெல்சி, இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் முருகன், ஊராட்சி செயலாளர் அமெச்சியார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாராயணன், இசக்கிமுத்து, ஞானராஜ், முன்னாள் ஊராட்சி செயலாளர் அப்துல்காதர், ஜோசப், திசையன்விளை நகரச் செயலாளர் பேராசிரியர் ஜான்கென்னடி உள்ளிட்ட 70 பேர் மீது திசையன்விளை போலீசார் வழக்கு.
