×

சர்ச்சைக்குரிய பதிவு தன் மீதான வழக்கை ரத்து செய்ய ஆதவ் அர்ஜுனா ஐகோர்ட்டில் மனு: விரைவில் விசாரணை

 

சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 அப்பாவிகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில், வன்முறையில் ஈடுபட்டு, புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று சில கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த பதிவின் அடிப்படையில் ஆதவ் அர்ஜுனா மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். ரத்து செய்ய வேண்டும் என ஆதவ் அர்ஜுனா மனு செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

 

Tags : Adhav Arjuna ,Chennai ,Thaweka ,Vijay ,Karur ,Campaign ,Management General Secretary ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்