×

தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவிகளுக்கு நவீன கழிப்பறை

தர்மபுரி, டிச.27: தொப்பூர் டி.காணிகரஅள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில், சுமார் 1000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ₹11.50 லட்சம் மதிப்பில் நவீன சுகாதார வளாகம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. இதனை டாக்டர் செந்தில்குமார் எம்.பி., நேற்று திறந்து வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகள் கழிப்பறை, சுகாதார வசதியின்மை காரணமாக படிப்பை தொடராமல் இடையில் நிறுத்தக்கூடாது என்ற நோக்கில், கடந்த நிதி ஆண்டில், தர்மபுரி மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகளில் நாப்கின் எரியூட்டும் இயந்திரத்துடன் கூடிய நவீன கழிப்பறைகள் கட்டும் பணி, நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் தொடங்கப்பட்டது. தற்போது டி.காணிகரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிய கழிப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக பள்ளி நிர்வாகம் பராமரிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள  அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவிகளின் நலன் கருதி நவீன கழிப்றை வசதி ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை சுமதி, பள்ளி மேலாண் குழு தலைவர் மோகன், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம், துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : government schools ,
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...