×

பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி அலுவலகங்கள் வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 37576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 6976 நடுநிலைப் பள்ளிகள், 24,350 தொடக்கப் பள்ளிகள். பெரும்பாலான பள்ளிகள் நல்ல வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. மற்ற பள்ளிகளில் உரிய வசதிகள் செய்யும் பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், சில நடுநிலைப் பள்ளிகள், மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்காக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகங்கள், உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அதனால் மாணவர்களுக்கு போதிய வகுப்பறை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபன் கடந்த ஜனவரியில் விசாரணை நடத்தி உடனே அந்த கல்வி அலுவலகங்களை மாற்ற உத்தரவிட்டார். அதன் பேரில் தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் வரும் கல்வி ஆண்டு முதல் முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் பள்ளிக் கட்டிடங்களில் செயல்படவில்லை என்பதை உறுதி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

The post பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி அலுவலகங்கள் வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...