×

மோடிக்கு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து

 

 

புதுடெல்லி: கடந்த 2001 அக்டோபர் 7ல் குஜராத் முதல்வராக பதவியேற்ற மோடி அரசின் தலைமை பதவியில் தொடர்ந்து 24 ஆண்டுகளை கடந்து 25ம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார். இது தொடர்பாக மோடிக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அதில்,பிரதமரின் தொலைநோக்கு பார்வை, பலவீனமான பொருளாதாரத்தை கொண்ட நாடுகள் பட்டியலில் இருந்து உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றியுள்ளது. மோடியின் லட்சிய திட்டங்கள் லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Tags : Vice President ,C.P. Radhakrishnan ,Modi ,New Delhi ,Chief Minister of ,Gujarat ,Vice President C.P. Radhakrishnan ,
× RELATED யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை...