×

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் பாக்.கை நசுக்கிய ஆஸி

 

 

கொழும்பு: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் 9வது போட்டி, இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா துவக்க வீராங்கனைகள் கேப்டன் ஆலிஸா ஹீலி 20, போபே லிட்ச்பீல்ட் 10 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 33.5 ஓவரில் ஆஸி, 8 விக்கெட் இழந்து 115 ரன்னுக்கு தடுமாறியது. இருப்பினும் பெத் மூனி, அலானா கிங் இணை அற்புதமாக ஆடி 106 ரன்களை வேட்டையாடியது.

 

114 பந்துகளில் 109 ரன்கள் குவித்த மூனி, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அலானா கிங் ஆட்டமிழக்காமல் 51 ரன் எடுத்தார். அதனால், ஆஸி, 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்தது. அதையடுத்து களமிறங்கிய பாக். வீராங்கனைகள் சொதப்பலாக ஆடி விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தனர். 36.3 ஓவரில் பாக். 114 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதனால், 107 ரன் வித்தியாசத்தில் ஆஸி அபார வெற்றி பெற்றது.

 

 

Tags : Women's World Cup Cricket ,Aussies ,Pakistan ,Colombo ,Women's World Cup One-Day Cricket ,Australia ,Captain Alyssa Healy ,Popeye Litchfield ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி