×

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி

தர்மசாலா: இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 தர்மசாலாவில் நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய வேகங்களை சமாளிக்க முடியாமல் தென் ஆப்ரிக்கா ஓபனராக களமிறங்கிய ஹென்ட்ரிக்ஸ் டக் அவுட் ஆக, டி காக் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மார்க்ரம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் பிரிவிஸ் 2 டன், ஸ்டப்ஸ் 9 ரன், போஸ்க் 4 ரன், பெரேரா 20 ரன், ஜான்சன் 2 ரன்னில் அவுட் ஆகினர்.

அரை சதம் கடந்த மார்க்ரம்மும் 61 ரன்னில் வெளியேறினார். நார்ட்டிஜ் 2 ரன், பேர்ட்மேன் 1 ரன்னில் அவுட் ஆக தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 117 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அர்ஷிப் சிங், ரானா, வருண், குல்தீப் தலா 2 விக்கெட், சிவம் துபோ, பாண்ட்யா தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, களம் இறங்கிய இந்திய அணி 15.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை எடுத்தது. இதனால், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

Tags : India ,South Africa ,Dharamsala ,Hendricks ,
× RELATED தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20...