×

இதய பரிசோதனை முடிந்து வீடு திரும்பிய ராமதாசிடம் நலம் விசாரித்த திருமாவளவன்

சென்னை: இதய பரிசோதனை முடித்து வீடு திரும்பிய பாமக நிறுவனர் ராமதாசிடம் விசிக தலைவர் திருமாவளவன் நலம் விசாரித்தார். இதய பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார்.

அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் ஆஞ்சியோ பரிசோதனை முடிந்து நலமுடன் நேற்று ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து உள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : Thirumavalavan ,Ramadoss ,Chennai ,Vishwakarma ,PMK ,Apollo Hospital ,Greams Road, Chennai ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...