×

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு விழா கொண்டாட்டம்: விமானப்படை வீரர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

டெல்லி: இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தின விழா உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள கிண்டன் விமானப் படை தளத்தில் விமானப் படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

விமானப் படை வீரர்கள் கம்பீர நடை போட்ட காட்சியை முப்படை தளபதி அனில் சவான் மற்றும் விமானப் படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் ஆகியோர் பார்வையிட்டனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது விமானப்படை ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில் வீரர்களின் அனுவகுப்பு அமைந்திருந்தது. விமானப் படை தினத்தை முன்னிட்டு ரஃபேல், மிக் 29 உள்ளிட்ட போர் விமானங்களின் கண்காட்சியும் நடைபெற்றது. விமானப்படை தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : Indian Air Force ,President of the ,Delhi ,Ghaziabad, Uttar Pradesh ,Tri-Army ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்