×

ஆதனக்கோட்டை ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம்

புதுக்கோட்டை, டிச.26: புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராகி வருகிறது. அ.தி.மு.க.வை நிராகரிப்போம், ஸ்டாலின் வராரு விடியல் தரப்போராறு என்ற தலைப்பில் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துகளில் கிராம சபை மற்றும் வார்டு கூட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.  அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கிராசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டைஊராட்சியில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை எம்எல்ஏ பெரியண்ணன் அரசு, ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் எம்எம் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : village council meeting ,DMK ,Adanakkottai ,
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்