×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 35 பேருக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

வேலூர், டிச.26: இங்கிலாந்தில் இருந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டத்தில் நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா பரவல் பெரும் சவாலாக உள்ளது. இந்தியாவில் இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலைமை கட்டுக்குள் வந்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் வீரியம் மிக்க கொரோனா பரவ ெதாடங்கியுள்ளது. இதன்காரணமாக இங்கிலாந்துடன் விமான சேவையை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்து சென்னை திரும்பியவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டது.

இதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்ைட மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடந்த 20ம்தேதி வரை மொத்தம் 35 பேர் இங்கிலாந்தில் இருந்து திரும்பியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 24 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 பேர் என கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 3 மாவட்டத்தில் 35 பேருக்கும் ‘நெகடிவ்’ என முடிவுகள் வந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுகாதாரத்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர். மேலும் அவர்களின் உடல்நிலை தொடர்ந்து சில நாட்களுக்கு கண்காணிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : corona testing health officials ,UK ,Vellore ,district ,Tirupati ,Ranipettai ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...