×

பாகிஸ்தானில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு – 6 பெட்டிகள் தடம் புரண்டன

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலை ராணுவத்தின் போராளிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சமீபகாலமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை குறிவைத்து தாக்கினர். கடந்த மார்ச் மாதம் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்தி 400 பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து பயணிகளை மீட்டனர்.இந்த நிலையில் இன்று ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அந்த ரெயில் குவெட்டா நகருக்கு சென்று கொண்டிருந்தது. சிந்து-பலூசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் பகுதியில் ரெயில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதனால் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். உடனே மீட்புக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Pakistan ,Islamabad ,Baloch Liberation Army ,Balochistan ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்