×

பாப்பிரெட்டிப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம்

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.26: பாப்பிரெட்டிப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டிற்கான அரவை பணி நேற்று துவங்கியது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணி நேற்று துவங்கியது. நிகழ்ச்சியில் தர்மபுரி டிஆர்ஓ ராமமூர்த்தி கலந்துகொண்டு அரவையை துவக்கி வைத்தார். விழாவில் எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், ஆலையின் மேலாண்மை இயக்குனர் ரகமத்துல்லா கான், ஆலை சேர்மன் விஸ்வநாதன், துணை சேர்மன் மகாலிங்கம் மற்றும் சிஎம்ஆர் முருகன், சுப்பிரமணி, ராஜசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்டனர். ஆலையில் இந்த ஆண்டு 1.28 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ஆலை பகுதியில் உள்ள ஆலைக்கு சொந்தமான கரும்பு 98 ஆயிரம் டன் ஆகும். தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு 30 ஆயிரம் டன் ஆகும். மேலும், 2019-20ம் ஆண்டு அரவை பருவத்தில் ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த அங்கத்தினர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கரும்பு உற்பத்தி இடைநிலை ஊக்கத்தொகை, வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : launch ,Papirettipatti Cooperative Sugar Mill ,
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!