×

கோவை ஜி.எம். நகரில் கார்த்திக் எம்.எல்.ஏ ஆய்வு

கோவை, டிச. 26: கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் வார்டு 74, ஜி.எம்.நகர்  1 மற்றும் 2-வது வீதியில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ நேரில் சென்று, அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்தார். பின்னர், அவர்களின் கோரிக்கைகளான மழைநீர் வடிகால் அமைப்பது, புதிய தார்ச்சாலைகள் அமைத்தல், சாக்கடைக் கழிவு நீரை அகற்றி மண், கழிவுகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தல், மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர், சம்பந்தப்பட்ட  துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு விரைவில் அவற்றை நிறைவேற்ற வலியுறுத்துவதாக உறுதியளித்தார்.
அப்போது, பொதுக்குழு உறுப்பினர் முருகன், சிங்காநல்லூர் பகுதிக்கழகம்-3 பொறுப்பாளர் ஷேக் அப்துல்லா, பெரியகடைவீதி பகுதிக்கழகம்-2 பொறுப்பாளர் பதுருதீன், 74-வது வட்டக்கழகச் செயலாளர் மேகனாதன், துணைச்செயலாளர் அல்லாபிச்சை, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அக்ரிபாலு, சுந்தரலிங்கம், மாவட்ட விவசாய அணி துணைஅமைப்பாளர் சையதுரியாசுதீன், மாவட்ட தொண்டரணி துணைஅமைப்பாளர் கோவை அபு, பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர் அமானுல்லா, வட்டப் பொறுப்பாளர் யூசுப், ரஹமத்துல்லா, டைலர்மணி, சிங்கை சாஹூல், டென்ட்அலி, பாரூக், பரமன், இளைஞரணி துணை அமைப்பாளர் ஜாஹீர் உசேன், தௌபிக் அகமது, நூர், செந்தில், நாகராஜ், ராஜன்,கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புக்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Tags : Coimbatore G.M. ,city ,Karthik MLA ,
× RELATED வாணியம்பாடி அதிமுக நகர துணை செயலாளர் கோவிந்தனுக்கு பிடிவாரண்ட்