×

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் ஒய்யாரமாக உலா வந்த காட்டெருமைகள்; மயிரிழையில் உயிர் தப்பிய சுற்றுலாபயணி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள் நகர்ப்பகுதிக்குள் உலா வருவதும், குடியிருப்பு பகுதிக்குள் முகாமிடுவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் இன்று இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டெருமைகள் திடீரென பேருந்து நிலையத்திற்குள் உலா வந்தது. இதனால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் பதறி ஓடினர். மேலும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்தனர்.

குறிப்பாக சாலையில் முன்பாக சென்ற காட்டெருமையை பார்த்து கொண்டிருந்த சுற்றுலா பயணி ஒருவர் பின் புறத்தில் வந்த மற்றொரு காட்டெருமையை கண்டு அலறியடித்து ஓடினார், நல்வாய்பாக அப்பகுதியில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் அந்த சுற்றுள்ள பயணி திரும்பி பார்த்ததால் உயிர் தப்பினார். இதனை தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நில பகுதிக்குள் அந்த இரண்டு காட்டெருமைகலும் சென்றது. இதனால் பேருந்து நிலைய பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இது போன்ற வன விலங்குகள் அடிக்கடி உலாவருவது மனித விலங்கு மோதல் ஏற்படுவதற்கு சூழல் நிலவி வருவதால் , வேட்டை தடுப்பு பணியாளர்களை பணியில் அமர்த்தி காட்டெருமைகள் உலா வருவதை தடுத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே வேண்டுகோள் எழுந்துள்ளது.

Tags : Kodaikanal bus station ,Dindigul District Godaikanal ,
× RELATED சென்னை குடிநீர் ஏரிகளில் 95.01% நீர் இருப்பு