×

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமை

கிருஷ்ணகிரி, டிச.25:  கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புதிய வகை கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார்.  அப்போது அவர் பேசியதாவது: இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது என கண்டறியப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தமிழக முதல்வர், இங்கிலாந்து மற்றும் பிற வெளிநாட்டிலிருந்து வரும் நபர்கள் கடைபிடிக்கை வேண்டிய நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை செயல்படுத்த ஆணை பிறப்பித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 25.11.2020 முதல் 22.12.2020 வரை 132 நபர்கள் பிற நாடுகளில் இருந்தும், மேலும் 6 பேர் இங்கிலாந்தில் இருந்தும் என மொத்தம் 138 பேர் வருகை தந்துள்ளனர். 5 நபர்கள் ஓசூர் மாநகராட்சி மற்றும் ஒருவர் காவேரிப்பட்டணம் பகுதியைச் சார்ந்தவர்கள். இதில் 3 நபர்கள் ஆண்கள், 3 நபர்கள் பெண்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் தனிப்படுத்தப்பட்டு, அனைவருக்கும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள் இருந்து வருகை தரும் நபர்கள் மருத்துவர்கள் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். விமானங்கள் மூலம் வருகை தரும் நபர்கள் 96 மணி நேரத்திற்குள்ளாக கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என்ற சான்று அளிக்கப்பட வேண்டும். மாவட்டத்தின் எல்லைகள் அனைத்தும் முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும். வெளி நாடுகளிலிருந்து வரும் நபர்கள் கட்டயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
× RELATED மது விற்ற 2 பேர் கைது