×

தென்காசியில் எம்.எல்.ஏ. கார் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

தென்காசி: தென்காசி மாவட்டம் அருகே வெங்கடாம்பட்டி ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ்பாண்டியனின் கார் ஓட்டுநர் முருகன் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி ஊராட்சி அழகம்மாள்புரம் பிள்ளையாா் கோயில் தெருவை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் முருகன் இவர் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மனோஜ்பாண்டியரிடம் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே ஊரை சேர்ந்த இசக்கி என்பவருக்கும் நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மதியம் முருகன் தனது மனைவி மாரியம்மாள் மற்றும் குழந்தைகளுடன் அவர் வீட்டில் இருந்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த இசக்கி அவருடைய ஆடு முருகன் வீட்டுக்கு முன்னிருந்த செடிகளை மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனை முருகன் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கி அவருடைய சகோதர்கள் பலர் அவர்களை கம்பி மற்றும் அருவாள் வெட்டி தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த முருகன் மற்றும் மாரியம்மாள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த தாக்குதல் சமந்தமாக வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. இது குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : MLA ,Tenkasi ,Murugan ,Venkatampatti Alankulam ,Manoj Pandian ,Tenkasi district ,Pandi ,Alagammalpuram Pillayar Koil Street, Venkatampatti Panchayat ,Kadayam ,Tenkasi district… ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்