- எம் எஸ் சுவாமிநாதன்
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- தரமணி
- எம் எஸ் வேளாண் நிபுணர்
- சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்
- நூற்றாண்டு நினைவேந்தல்
- எல்.எம். கே. ஸ்டாலின்
சென்னை: எம்.எஸ்.சுவாமிநாதன் உணவு பாதுகாவலர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். எம்.எஸ்.சுவாமிநாதன் உருவப் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்திய பின்னர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்;
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை இந்தியா என்றும் மறக்காது. வரலாற்றில் ஒரு சிலர் தான் பலகோடி பேர் மீது தாக்கம் செலுத்தும் வகையில் வாழ்ந்துள்ளனர். எம்.எஸ்.சுவாமிநாதன் அத்தகையவர். மிக எளிமையான வாழ்வை வாழ்ந்தவர். இன்று உலகமே பேசிக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றம் குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே எம்.எஸ். சுவாமிநாதன் பேசியிருக்கிறார். பலமுறை எம்.எஸ்.சுவாமிநாதனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இந்திய பசுமை புரட்சியின் தந்தை என உலகமே அவரை அழைத்தாலும் நமக்கு அவர் உணவுத்துறையை பாதுகாத்தவர். மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி நடத்தியவர் எம்.எஸ்.சுவாமிநாதன். வேளாண்மையையும் உழவர்களையும் எந்நாளும் பாதுகாப்போம். 2050ம் ஆண்டுக்குள் கார்பன் பயன்பாட்டை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிர முயற்சி எடுக்கிறது. உழவர்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. வயிறு நிறைந்தால் மட்டும் போதாது, நாம் கொடுக்கும் உணவு சத்துள்ளதாக இருக்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதனின் வாழ்வும் தொண்டும் நமக்கு எப்போதும் வழிநடத்தும். எம்.எஸ்.சுவாமிநாதனின் கடமைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் வகையில் வேளாண் மாணவர்கள், விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
