×

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதா சட்டமான பிறகு மாநிலங்களுக்கு ரூ.29,000 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்

டெல்லி: கடும் எதிர்ப்புக்கு இடையே நள்ளிரவு 12 மணிக்கு மாநிலங்களவையிலும் ஜி ராம் ஜி மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதா சட்டமான பிறகு மாநிலங்களுக்கு ரூ.29,000 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். புதிய ‘சட்டம்’ மாநிலங்களின் பங்களிப்பை 40%-ஆக உயர்த்துவதால் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். புதிய ‘சட்டம்’ அமலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக ரூ.2,718 கோடி நிதிச்சுமை ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது 100 நாள் வேலை சட்டப்படி ஒன்றிய அரசு ரூ.86,000 கோடியும் மாநிலங்கள் ரூ.9,556 கோடியும் பங்களிப்பு; புதிய ‘சட்டம்’ அமலுக்கு வந்த பிறகு ஒன்றிய அரசின் பங்கு ரூ.57,333 கோடியாக குறையும். மாநிலங்களின் பங்கு ரூ.9,556 கோடியில் இருந்து ரூ.38,222 கோடியாக உயரும். 100 நாள் வேலை திட்டத்தில் மனித சக்தி நாட்கள் அடிப்படையில் 2025ம் ஆண்டில் தமிழ்நாடு ரூ.906 கோடி செலவு செய்துள்ளது. புதிய சட்டப்படி தமிழ்நாடு ஆண்டுக்கு தோராயமாக மனித சக்தி நாட்கள் அடிப்படையில் ரூ.3,624 கோடி செலவிட வேண்டும்

தமிழ்நாடு போன்று உத்தரப்பிரதேசம், பீகார், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களும் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாகும்.

Tags : Parliament ,Delhi ,BJP government ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...