×

ஜனசக்தி ஜனதா தளம் லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவ் புது கட்சி

பாட்னா: லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சி தொடங்கியுள்ளார். லாலு பிரசாத் யாதவின் மகனும் பீகார் எம்எல்ஏவுமாக இருப்பவர் தேஜ் பிரதாப் யாதவ். ஏற்கனவே திருமணமானவரான தேஜ் பிரதாப் அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுடன் உறவில் இருப்பதாக கடந்த மே மாதம் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேஜ் பிரதாப்பை கட்சியில் இருந்து நீக்கி லாலு பிரசாத் நடவடிக்கை எடுத்தார். பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடை பெற இருக்கும் நிலையில்,லாலுவின் மகன் தேஜ் பிரதாப், ஜனசக்தி ஜனதா தளம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கட்சியின் தேசிய தலைவராக அவரே இருப்பதாகவும் கட்சி சின்னமாக கரும்பலகை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்தல் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். அதில் பீகாரின் வளர்ச்சிக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட தயாராக உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Janshakti Janata Dal ,Lalu ,Tej Pratap Yadav ,Lalu Prasad Yadav ,Bihar ,Tej Pratap ,Anushka… ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...