பரேலி: உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் கடந்த 4ம் தேதி மிலாது நபியின்போது ஐ லவ் முகம்மது என்ற வாசகத்துடன் மின்சார விளம்பர பலகை நிறுவப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் போலீசார் இதனை அகற்றினார்கள். . இந்நிலையில் பரேலியில் உள்ளூர் மதகுருவும், இத்தேஹத்-இ-மில்லத் கவுன்சிலின் தலைவருமான மவுலானா தவ்கீர் ரசா, ஐ லவ் முகமது பிரச்சாரத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதன் காரணமாக பரேலியில் இஸ்லாமியா மைதானம் அருகே ஏராளமான இஸ்லாமியர்கள் திரண்டனர். ஆனால் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதன் காரணமாக போலீசார் மற்றும் அங்கு திரண்டு இருந்தவர்களை கலைக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவானது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதன் காரணமாக போலீசார் தடியடி நடத்தினார்கள். இதையடுத்து நிலைமை கட்டுக்குள் வந்தது.
