- பீகார் தேர்தல்கள்
- பஜா
- பிரியங்கா காந்தி
- பாட்னா
- காங்கிரஸ்
- பொது செயலாளர்
- மஹ்லா சம்வாத்
- பட்னா, பீகார்
- மோடி
- உள்துறை மந்திரி
- அமித் ஷா
- முதல் அமைச்சர்
- நிதீஷ் குமார்
பாட்னா: பீகார் மாநிலம், பாட்னாவில் மகிளா சம்வாத் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது,‘‘பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் நிதிஷ்குமார் போன்ற தலைவர்களின் உண்மையான நோக்கங்களை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களால் பாடம் கற்பிக்கத் தகுதியானவர்கள். தேர்தல் நெருங்கி வருவதால் அரசு சார்பில் ரூ.10ஆயிரம் வழங்கப்படுகின்றது. ஆனால் ஒவ்வொரு மாதமும் உதவித் தொகை தொடரும் என்று அவர்கள் உறுதியளிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மக்களின் உண்மையான நோக்கங்களை உணரும் திறன் பெண்களுக்கு உண்டு. பிரதமர் மோடி, அமித் ஷா நிதிஷின் உண்மையான நோக்கங்களை நீங்கள் உணர வேண்டும். தேர்தல் வருவதற்கு சில நாட்களுக்கு முன் உங்களுக்கு பணம் வழங்கப்படுவது அது உங்கள் வாக்குகளை குறிவைத்து தரப்படுவது என்பதை உணர வேண்டும். அவர்களால் உங்களின் பாதுகாப்பு தேவையை நிவர்த்தி செய்ய முடியாது” என்றார்.
