×

பல வாகனங்களில் மோதி விபத்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு வந்த இந்தியர் கைது

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த 2024ம் ஆண்டு வணிக ரீதியான 18 சக்கர லாரியை இந்தியரான பிரதாப் சிங் ஓட்டிச்சென்றார். அப்போது பல்வேறு வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 5 வயது குழந்தை பலத்த காயமடைந்தது. இந்நிலையில் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பிரதாப் சிங்கை கைது செய்தனர். அவரது குடியுரிமை நடவடிக்கைகள் முடியும் வரை அவர் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவின் காவலில் இருப்பார். பிரதாப் கடந்த 2022ம் ஆண்டு தெற்கு எல்லையை சட்டவிரோதமாக கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளார்.

Tags : US ,New York ,Pratap Singh ,California, USA ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக...