×

20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் போராட்டம்

நீடாமங்கலம், டிச.24: வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பாமக நீடாமங்கலம் நகர செயலாளர் வேலவன் தலைமை வகித்தார். கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனி.தனபால், மாவட்ட அமைப்பு செயலாளர் செந்தில்குமார், ஒன்றியத் தலைவர் பாலா, ஒன்றிய செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக பேரூராட்சி அலுவலகத்தை அடைந்து அங்கு அலுவலர் செல்வகுமாரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Tags :
× RELATED தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்