×

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாளில் அரசு இல்லம்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசு இல்லம் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேற்கண்ட வழக்கானது உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பத்து நாட்களுக்குள் பொருத்தமான அரசு குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், அதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுவதாக நீதிபதிகள் முன்னிலையில் உறுதியளித்தார்.

Tags : Arvind Kejriwal ,New Delhi ,Delhi High Court ,Aam Aadmi Party ,AAP ,Delhi ,Chief Minister ,Court ,Justice ,Sachin… ,
× RELATED வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்க தனி...