×

இந்தியா-பாக். பிரச்னை காஷ்மீர் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை: அமெரிக்கா திட்டவட்டம்

நியூயார்க்: இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், ஐநா பொதுக்கூட்டத்திலும் அதை அவர் உறுதிப்படுத்தினார். இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை மூத்த அதிகாரி ஒருவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீர் விவகாரம் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான நேரடிப் பிரச்னை என்பது அமெரிக்காவின் நீண்ட கால கொள்கை. இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் உதவி தேவை எனக் கூறினால் அதற்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா உதவியது என்பது முற்றிலும் உண்மைதான்’’ என்றார்.

Tags : India ,Pakistan ,Kashmir ,America ,New York ,US ,President ,Trump ,UN General Assembly ,US State Department ,Kashmir… ,
× RELATED அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்ற...