×

வார இறுதி நாட்களை வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம்

சென்னை: காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. நாளை (வெள்ளிக் கிழமை) நாளை மறுநாள் (சனிக்கிழமை). செப்.28ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு செப்.29ம் தேதி மற்றும் செப்.30ம் தேதி ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக் கிழமை) அன்று 790 பேருந்துகளும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) 565 பேருந்துகளும் செப்.29ம் தேதி (திங்கட்கிழமை) 190 பேருந்துகளும் மற்றும் செப்.30ம் தேதி (செவ்வாய்கிழமை) அன்று 885 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் 215 பேருந்துகளும் செப்.29ம் தேதி மற்றும் செப்.30ம் தேதி ஆகிய நாட்களில் 185 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் 145 பேருந்துகளும் செப்.29ம் தேதி மற்றும் செப்.30ம் தேதி ஆகிய நாட்களில் 105 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அக்.4ம் தேதி முதல் அக்.5ம் தேதி வரை அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 22,735 பயணிகளும் சனிக்கிழமை அன்று 14,415 பயணிகளும் ஞாயிற்றுக்கிழமை அன்று 11,908 பயணிகளும் திங்கட்கிழமை அன்று 8,070 பயணிகளும் மற்றும் செவ்வாய் அன்று 33,138 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Transport Department ,Ayudha Puja ,Vijayadasami ,Gandhi ,Jayanti ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...