×

சிவப்பு எள் கிலோ ரூ.95க்கு ஏலம்

க.பரமத்தி, டிச.24: கரூர் மாவட்டத்தில் கிராம புற பகுதியில் மானாவாரியாக எள், கம்பு, சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதனை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். நேற்று முன்தினம் 41மூட்டைகளில் 2,984 எடைக்கு நடந்த ஏலத்தில் சிகப்பு எள் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.84, அதிக விலையாக கிலோ ரூ.95க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட தற்போது கிலோவுக்கு ரூ.3உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
× RELATED செவ்வாய்தோறும் மாநகராட்சி பகுதிகளில் முட்செடிகளை அகற்ற வேண்டும்