×

விவசாயிகள் ேகாரிக்கை அதிமுகவை நிராகரிக்கிறோம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே கிராமசபை கூட்டம்

அரவக்குறிச்சி,டிச.24:அதிமுகவை நிராகரிக்கிறோம் என்கிற தலைப்பில் கிராம மக்களை சந்தித்து, திமுக சார்பில் நடத்தப்படும் கிராமசபைக் கூட்டம் கரூர் மாவட்டத்தில் தொடங்கியது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் மேல்பாகம் ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் திமுகவின் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியச் செயலாளர் மணியன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் கவிதா நஞ்சுன்டேஸ்வரன் வரவேற்றார். கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், சிறுபான்மை பிரிவு செயலாளர் முனவர்ஜான் முன்னிலை வகித்தனர். இதில் கரூர் மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசுகையில்,.
ஸ்டாலின் தான் வராரு, விடியல் தான் தாராரு. என்ற முழுக்த்துடன் 16 ஆயிரம் கிராமங்களில் இக்கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று கூறி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில், பொதுமக்களுக்கு ஆளும் அரசின் அவலத்தை சுட்டிக் காட்டுவதற்காக, 157 ஊராட்சிகள், கரூர், குளித்தலை ஆகிய நகராட்சிக்கு உட்பட்ட 72 கிராமங்களில் இந்த கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

விவசாயிகளை வஞ்சிப்பது, பொதுமக்கள் வேலை இல்லாமல் தவிப்பது, சமூக நீதியை காக்க தவறிய அரசு என 10 அவலங்களை தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி பட்டியலிட்டுள்ளார்.அதிமுக ஆட்சியில் படித்த இளைஞர்கள் வேலையில்லா திண்டாடத்தில் உள்ளனர். இதனால், பட்டப் படிப்பு முடித்துவிட்டு சுமார் 23 லட்சம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பல மாணவர்கள் தாங்கள் வாங்கியகல்விக்கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

குளித்தலை: நங்கவரம் பேரூராட்சி பகுதியில் திமுக அறிவித்த அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற கிராமசபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாநில வர்த்தக அணி துணைச் செயலாளரும் முன்னாள் நகர்மன்றத் தலைவருமான பல்லவி ராஜா தலைமை வகித்தார் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கலைமணி முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் தலைமை கழக பேச்சாளர் குளித்தலை சலாவுதீன், நிர்வாகிகள் வேலவன், சேகர், கருணாநிதி, ரவிச்சந்திரன், தொழில் நுட்ப அணி விநாயகம் மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குளித்தலை நகர திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் மணதட்டை பகுதியில் நடைபெற்றது கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ வும் நகர செயலாளருமான மாணிக்கம் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராமன் முன்னிலை வகித்தார். இதில் நகர அவைத்தலைவர் சாகுல் அமீது மாவட்ட நிர்வாகிகள் மெடிக்கல் மாணிக்கம் ஜபருல்லா பாலசுப்பிரமணி நகர பொருளாளர் தமிழரசன், துணைச் செயலாளர் செந்தில்குமார்உள்பட பலர் கலந்து கொண்டனர் கூட்ட முடிவில் மணதட்டை பகுதியில் வீடு வீடாக அதிமுகவின் நிராகரிப்போம் துண்டுப்பிரசுரங்கள் வழங்கினர்.

க.பரமத்தி: க.பரமத்தி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடந்தையில் நடைபெற்ற அதிமுகவை நிராகரிக்கிறோம் கிராம சபை கூட்டத்திற்கு திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான கே.கருணாநிதி தலைமை வகித்து பேசுகையில், திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்து கூறி திமுக மீண்டும் ஆட்சிக்கு வர பாடு படுவோம் என உறுதி ஏற்போம் என்றார். கூட்டத்தில் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் கருப்புசாமி வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மோகன்ராஜ், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் நல்லசாமி, ஊராட்சி தலைவர் செல்விரவி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கையெழுத்து இயக்க பேனரில் கையெழுத்திட்டனர். முடிவில் நிர்வாகி செல்வா நன்றி கூறினார்.

Tags : meeting ,regime change ,Tamil Nadu ,
× RELATED காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது...