×

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா

உடன்குடி, செப். 25: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு சந்தையடியூர் தசரா குழு சார்பில் சிதம்பரேஸ்வரர் கோயில் கடற்கரைக்கு செல்லும் வழியில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதிகாலை முதல் தொடர்ந்து பக்தர்களுக்கு டிபன் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது. அன்னதானத்தை சந்தையடியூர் ஊர்த்தலைவர் மால் வாசுதேவன் துவக்கி வைத்தார். இதில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அறங்காவலர்குழு உறுப்பினர் மகாராஜா, தசரா குழு நிர்வாகி சிவக்குமார், உடன்குடி பேரூராட்சி துணை தலைவரும், திமுக செயலாளருமான சந்தையடியூர் மால்ராஜேஷ், முத்துப்பாண்டி, கணேசன், தனசிங், வேலையா, சுயம்பு சதீஷ், சகா, மகேஷ், முத்துபிரகாஷ், ஆட்டோகணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kulasekaranpatnam Mutharamman Temple Dasara Festival ,Udonkudi ,Anthanam ,Chandaidiyur Dasara Group ,Chidambareswarar Temple ,Annathanaththa ,Chandaidiyaiyur ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...