சென்னை: சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ஐஐடியின் டீப் டெக் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான வான்கெல் எனர்ஜி சிஸ்டம் தொழில்நுட்ப பயன்பாட்டு தொழில்களில் ரூ.66 ஆயிரம் கோடிக்கு மேலான வெப்ப இயக்கவியல் ஆற்றல் இழப்பை சமாளிக்கும் நோக்கில் இயங்கி வருகிறது.
வீணாகும் நீராவி அழுத்தத்தை தூய்மையான ஆற்றலாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ள இந்நிறுவனம் இதற்காக பீனிக்ஸ் எக்ஸ்பாண்டர் என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்த சாதனம் அழுத்தம் குறைக்கும் வால்வுகளால் வீணாக்கப்படும் ஆற்றலை தூய மின்சாரமாக மாற்றி ஆற்றல் இழப்பை சரிசெய்கிறது.
இந்நிலையில், உத்திசார் முதலீட்டாளர்களின் பங்கேற்புடன் 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதியை திரட்டியுள்ளது. இந்த நிதியை அறிவியல், தொழிலநுட்பம், காலநிலை தொழிலநுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் முதலீடு செய்ய உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா மட்டுமின்று உலகளாவிய சந்தகளை எதிர்கொள்ளும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூனிட்டுகளை நிறுவிடவும் இந்த முதலீட்டை நிதியை பயன்படுத்தும்.
