×

ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியல் போராட்டம்

கும்பகோணம், டிச. 23: நான்கு நாட்களாக பொருட்கள் வழங்காததால் திருபுவனம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டதுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புவனம் காங்கேயன்பேட்டையில் ரேஷன் கடையில் கடந்த 4 நாட்களாக ரேகை பதிக்கும் இயந்திர கோளாறு காரணமாக பொருட்கள் வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் தினமும் பொருட்கள் வாங்க கடைக்கு வந்து ஏமாற்றத்துடன் சென்றனர். இந்நிலையில் நேற்று காங்கேயன்பேட்டை ரேஷன் கடையை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த தகவல் கிடைத்ததும் திருவிடைமருதூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், டிஎஸ்பி அசோகன், வட்ட வழங்கல் அலுவலர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் இயந்திர தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு நாளை (இன்று) முதல் தடையில்லாமல் பொருட்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்