×

சென்னை மாவட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் ஆலோசனை கூட்டம்

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன், தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன், தலைமையில் இன்று (23.09.2025) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் அதைப் பிரித்து வாக்குச்சாவடி மறுசீரமைப்பு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 3,718 வாக்குச்சாவடிகளில் 1,200-க்கும் அதிக வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, புதிதாக 353 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது, வாக்குச்சாவடி மறுசீரமைப்புக்குப் (Rationalisation) பின் 4,071 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளன. மேலும், கட்டட மாற்றம், பெயர் மாற்றம், வாக்குச்சாவடிகள் இணைப்பு மற்றும் வாக்குச்சாவடிகள் பிரிப்பு உள்ளிட்ட பணிகளும் இந்தப் பணிகளின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) ம.பிரதிவிராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) ஜி.சரவணமூர்த்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : J. ,Kumaraguruparan ,Chennai ,Election Commission of India ,Political Party Representatives ,Chennai District ,Officer ,J. KUMARAGURUBARAN ,
× RELATED இனுங்கூர் புதுப்பட்டியில் பொது நடைபாதையை அடைத்த தனிநபருக்கு எதிர்ப்பு