×

நியாய விலை கடை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

 

சென்னை: நியாய விலை கடை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீ்ர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பொது விநியோகத் திட்டத்திற்கு என்று தனித் துறையை உருவாக்குவது, நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் பொருட்களை பொட்டலங்களில் வழங்குவது, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அண்மையில் சென்னை சிவானந்தா சாலையில் நியாயவிலை கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நியாய விலைக் கடை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அரசுக்கு பெரிய அளவில் நிதிச் சுமை ஏற்படாது என்பதோடு, சுகாதாரத்தையும், எடையையும் உறுதி செய்ய வழிவகுக்கும். எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றதர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags : O. Panirselvam ,Chennai ,Price ,O. Paneer Selvam ,Principal ,O. ,Panneirselvam ,
× RELATED தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில்...