×

கொடியேற்றத்துடன் தொடங்கும் நவராத்திரி பிரம்மோற்சவம்!

சென்னை – மாமல்லபுரம் சாலையில் உள்ள திருப்போரூர் அருகே இருக்ககூடிய செம்பாக்கம் ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி மூலிகை அம்மன் லலிதாம்பிகை திருக்கோயிலில், 43ஆம் ஆண்டு “தசரா நவராத்திரி பிரம்மோற்சவ பெருவிழா’’ நடைபெற இருக்கிறது. வரும் 21.9.2025 அன்று விநாயகர் உற்சவம் தொடங்கி 22.9.2025 காலை 7.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்று, பத்து நாள்களும் விசேஷமாக காலை மாலை என இரு வேளைகளிலும் யாக சாலை பூஜை நடைபெறும். காலையில் “ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி’’ பல்லக்கில் பவனி வருவாள். அதே போல், மூலஸ்தானத்தில் இருக்கக்கூடிய பாலா திரிபுரசுந்தரிக்கு பத்து நாள்களும் காலை 10.00 மணிக்கு தொடர் லட்சார்ச்சனை நடைபெறும்.

மேலும், மாலையில் ஸ்ரீ மத் ஔஷத லலிதா சர்வாபரண அலங்காரமும், சோடஷ மகா தீபாராதனையும், இரவில், ஸ்ரீபாலா திரிபுர சுந்தரிக்கு அன்னம், கிளி, சிம்மம், நந்தி, காமதேனு, பூத வாகனம், குதிரை வாகனம் என வித விதமான விசேஷ அலங்காரத்தில் வாகன சேவை உற்சவமும் நடைபெறுகிறது.

இவை தவிர, தினமும் கன்யா பூஜை, விஜயதசமி அன்று காலையில் வித்யாரம்ப பூஜை, தீர்த்தவாரி உற்சவம், மாலையில் கொடியிறக்கம் நடைபெற்று, விசேஷ அலங்கார திருவீதி உலா நடைபெறும். மேலும், புரட்டாசி பெளர்ணமி வரை ஸ்ரீபாலாம்பிகைக்கு விடையாற்றி உற்சவமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

தினமும் அன்னதானம் நடைபெறும். அனைவரும் வருக ஸ்ரீபாலா ஸ்ரீமத் ஒளஷத லலிதா அம்பாளின் அருள் பெறுக!

தமிழகத்திலேயே நவராத்திரியில் கொடியேற்றி பிரம்மோற்சவம் நடைபெறும் கோயில் இரண்டே இரண்டு.

ஒன்று, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில், மற்றொன்று நமது செம்பாக்கம் ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி திருக்கோயில் மட்டுமே!

Tags : Navratri Brahmorshavam ,annual ,Dasara Navratri Brahmorsava Peruvija ,Chembakkam Sripura Sundari Herbal Amman Lalithambikai Temple ,Tiruporur ,Chennai ,Mamallapuram Road ,
× RELATED திருவாரூர், தியாகராஜர் திருக்கோயில்