ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்? என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.
தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான். முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன.
இவை சப்தவிடங்கத்தலங்கள்’ எனப்படுகின்றன. “சப்தம்’ என்றால் ஏழு. திருவாரூரில் வீதி விடங்கர். திருநள்ளாறில் “நகர விடங்கர். நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கர். திருக்குவளையில் அவனி விடங்கர்’, திருவாய்மூரில் “நிலவிடங்கர்’, வேதாரண்யத்தில் “புவனி விடங்கர், திருக்காரவாசலில் “ஆதி விடங்கர் என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன.
இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை ‘தியாகராஜர்’ என்பர்.
இந்த தெய்வத்திற்கு நவகிரகங்களும் நாமகரணம் செய்திருக்கிறது.
* பௌர்ணமி நாளில் இந்த கோயிலில் உள்ள தலவிருட்சமான பாதிரி மரத்திற்கு பாலும் நாட்டுச்சர்க்கரையும் கலந்து ஊற்றி இந்திரனையும் மகாவிஷ்ணுவையும் வேண்டி வன்மீக நாதரை வழிபட்டால் குபேர சம்பத்தும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
* நான்காம் பாவகத்தில் (4ம்) சந்திரன் உள்ளவர்கள் கடல் கடந்து தொழில் பாக்கியம் ஏற்படும். திருவோணம் நட்சத்திரத்தன்று கமலாலயம் சங்கு தீர்த்தத்தில் குளித்து மற்றும் தீர்த்தம் எடுத்து பின்பு அர்ச்சனை செய்துவிட்டு தீர்த்தத்தில் நாட்டு சர்க்கரை ஜவ்வாது போட்டு வெள்ளிப் பாத்திரத்தில் வீட்டில் வைத்தால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும் கடல் கடந்து செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
* செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த கோயிலில் மீனாட்சி குங்குமம் வாங்கி அர்ச்சனை செய்து விட்டுக்கு எடுத்து போய் பிள்ளையார் பிடித்து 48 நாள் வழிபட்டு மீண்டும் இத்தலத்திற்கு எடுத்து வந்து தீர்த்தத்தில் கரைத்து விட்டால் செவ்வாய் தோஷம் பாதிப்புகள் குறையும் பிளட் பிரஷர் பாதிப்பில் இருந்து விடுபடுவார்கள்.
* நான்காம் பாவகத்தில் சூரியன் இருந்தால் அல்லது செவ்வாய் இருந்தால் உத்திராடம் நட்சத்திரம் அல்லது அவிட்ட நட்சத்திரம் அன்று மஞ்சள் பட்டு வஸ்திரம் வாங்கி சுவாமிக்கு (தங்கம் / வெள்ளியில்) வேல் கொடுத்து வழிபட்டால் இந்திர அர்ச்சனை செய்தால் அரசியலில் மிகப் பெரிய வெற்றி அடைவார்கள். உயர் பதவிகள் பெறுவார்கள்.
எந்த சிவதிருத்தலத்திலும் கோளறு பதிகம் பாடினாலும் நவகிரக தோஷம் நிவர்த்தி பெற்று வெற்றி பெறுவார்கள்.
